12 பெயில்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மேதா சங்கர்

By Kalyani Pandiyan S
Mar 13, 2024

Hindustan Times
Tamil

2017 -ல் மும்பை வந்த மேதா 2018 -ல் ஆடிஷன்களில் கலந்து கொண்டார்.  

ஆரம்பத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தன.  கொரோனா பரவல் காலக்கட்டங்களில் பண நெருக்கடியில் சிக்கினார். 

2020 - களில் காஸ்டிங் இயக்குநர்கள் இவரின் திறமையை புரிந்து கொள்கின்றனர்.  பல வெப் சீரிஸ்களில் கமிட் ஆகி கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். 

ஒரு முறை விரக்தியில் தன்னுடைய தோழியுடன் வாய்ப்பு கிடைக்காதது குறித்து கோபமாக பேசி அழுது இருக்கிறார்.  எல்லாவற்றையும் சரியாக செய்தும் ஏன் எனக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்று கதறி இருக்கிறார். 

ஆனால் தான் இப்படியான மனநிலையில் இருக்கக்கூடாது என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது.  பின்னர், மீண்டும் எழுந்து வேலை செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டு வேலை செய்ய துவங்கி இருக்கிறார்.  

கனவு பலன்கள்