மாம்பழம் ருசிக்கு மட்டும் அல்ல.. உங்கள் அழகையும் பாதுகாக்கும்!

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 10, 2024

Hindustan Times
Tamil

நா ஊற வைக்கும் விதமாக ருசி கொண்ட பழமாக இருந்து வரும் மாம்பழம், சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. வயது மூப்பவடைவதை தடுப்பதோடு, சருமத்துக்கு பளபளப்பும் தருகிறது. மாம்பழத்தை சருமத்தில் அப்ளை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

Pexels

மாம்பழத்தின் சீசன் கோடை காலமாக இருந்து வரும் நிலையில், அதிகம்பேரலால் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகவும் இருந்து வருகிறது. சுவை மிகுந்து பழமாக இருந்து வரும் மாம்பழம் முகத்தில் பொலிவு தரவும், அதன் நிறத்தை மேம்படுத்தவும் செய்கிறது. இதில் வயது மூப்பாவதை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக சரும பளபளப்பை பெறுகிறது. முகத்தில் தென்படும் சுருக்கங்கள், மெல்லிய கோடுகளை நீக்குகிறது

Pexels

மாம்பழத்தில் இடம்பிடித்திருக்கும் அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் தாமிரம், போலேட், வைட்டமின் ஏ, பி, சி, ஈ சத்துக்கள் சருமத்துக்கு ஊட்டம் அளித்து இளமை தோற்றத்தில் வைத்து கொள்ள உதவுகிறது

Pexels

மாம்பழத்தில் இடம்பிடித்திருக்கும் அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் தாமிரம், போலேட், வைட்டமின் ஏ, பி, சி, ஈ சத்துக்கள் சருமத்துக்கு ஊட்டம் அளித்து இளமை தோற்றத்தில் வைத்து கொள்ள உதவுகிறது

Pexels

சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை மாம்பழம் தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சக்தி வாய்ந்த் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செய்லபடுகிறது. இது ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடி நடுநிலைப்படுத்துகிறது. இதனால் இள வயதில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது

Pexels

மாம்பழத்தில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சருமத்துக்கு பளபளப்பை தந்து, கரும்புள்ளிகளை குறைக்கிறது. வைட்டமின் கே சத்துக்களும் மாம்பழத்தில் நிறைந்து காணப்படுவதால் கண்களை சுற்றி இருக்கும் கரு வளையங்கள், வீக்கங்கள் குறைக்க உதவுகிறது. மாம்பழத்தை கூழ் ஆக்கி முகத்தில் தடவுவதனால் சருமம் ஒளிரும் 

Pexels

மாம்பழத்தில் இடம்பிடித்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடுகிறது. மாம்பழ கூழை முகத்தில் தடவினால் வீக்கம், பருக்கள் குறையும்

Pexels

மாம்பழ கூழை உங்களது பேஸ் பேக் உடன் சேர்த்து முகத்தில் தடவலாம். மாம்பழத்தை ஜூஸ் ஆக்கியம் பேஸ் பேக் உடன் சேர்த்து தடவினால் நல்ல பளபளப்பை பெறலாம். மாம்பழத்தை எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு 2 அல்லது 3 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

Pexels

இது தெரிஞ்சா பீட்ரூட்டை மிஸ்பண்ணவே மாட்டீங்க.. 5 அற்புத நன்மைகள் இதோ!