பாலசுப்பிரமணியத்திற்கும், மலேசியா வாசுதேவனுக்கும் இடையே இருந்த நட்பு குறித்து மலேசியா வாசுதேவனின் மகள் பிரியதர்ஷினி ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.  

By Kalyani Pandiyan S
Nov 24, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து அவர் பேசும் போது, “ உண்மையில் பாலசுப்ரமணியம் சாருக்கும், அப்பாவிற்கும் இடையே ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. ஆனால், அந்த பிரண்ட்ஷிப் வேறு மாதிரியாக இருந்தது.

ஆம், அவர்கள் பிற நண்பர்கள் போல, தினமும் செல்போனில் பேசிக் கொள்ள மாட்டார்கள்; அடிக்கடி சந்தித்து கொள்வது கிடையாது; அவர்களுக்கு இடையே ஒரு விதமான மரியாதை கலந்த நட்பு இருந்தது.  

அதாவது, இவர் எந்த அளவு சாதனைகள் புரிந்திருக்கிறார் என்பதை அவரும், அவர் எந்த அளவு சாதனைகளை புரிந்து இருக்கிறார் என்பதை இவரும் மனதில் ஏற்றிக்கொண்டு பழகினார்கள். 

அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது, பாலு சார் அடிக்கடி போனில் அழைத்து, அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்பார்.

அப்பாவின் மீதான அவரது அக்கறை ஆழமாகவே இருந்தது. பாட்டு கச்சேரிகளில் இருவரும் பாடும் பொழுது, அவர்கள் பாடல்கள் பாடுவது போல இருக்காது. இருவரும் சேர்ந்து பேசிக்கொள்வது போலதான் இருக்கும்.

அவர்களும் அதை அப்படித்தான் எடுத்துக் கொண்டு பாடினார்கள். அதற்கு உதாரணமாக மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் இருந்து வெளியான என்னம்மா கண்ணு பாடலை சொல்லலாம்” என்று பேசினார். 

பயணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள்?