சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?
By Kathiravan V Mar 08, 2024
Hindustan Times Tamil
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள் மகாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. பார்வதி தேவியிடம் சிவபெருமான் தன்னை வணங்குவதற்கு மாசி மாத தேய்பிறை 14ஆம் நாளான அமாவாசை முதல் நாளே மிகவும் உகந்த நாளாக சிவபெருமான் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியில் மாத சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன.

ஓவ்வொரு மாத சிவராத்திரியிலும், ஒவ்வொரு தெய்வங்கள் சிவனை வணங்குகின்றனர். அதேபோல் மாசிமாதத்தில் வரும் மகா சிவராத்திரியில் தேவ தூதர்களும், பக்தர்களும் வணங்குவதற்கே உரிய நாளாக சிவராத்திரி உள்ளது.
சிவராத்திரி அன்று பகலில் கடினமான உணவுகளை சாப்பிடாமல், பழங்கள் சாப்பிட்டு, முழு முழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும்.
இன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும்.
மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, காமம், சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது