’மகரத்தில் உச்சம் தொடும் செவ்வாய்!’ அலறி ஓடப்போகும் எதிரிகள்! முழு பலன்கள் இதோ!

By Kathiravan V
Feb 04, 2024

Hindustan Times
Tamil

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

மகர ராசியில் செவ்வாய் பகவான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதியான நாளை உச்சம் பெறுகிறார்.  செவ்வாய் பகவான் உச்சம் பெறும் வேளையில், செய்ய வேண்டியவற்றை செய்யாமல் தள்ளிப்போடுவதும், செய்யக்கூடாததை அவசர கதியில் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்

நேர்மை, நன்நெறி, ஒழுக்கத்தோடு செயல்பட வேண்டிய காலகட்டமாக இது உள்ளது. எதற்கும் அஞ்சாமல் மகர ராசியினர் செயல்படும்போது எதிரிகள் மகரராசியினரை கொண்டு அஞ்சும் நிலை ஏற்படும்.

உங்களை கண்டு ஏளனம் செய்த நபர்கள், உறவினர்கள், நண்பர்களின் கருத்துகளை எல்லாம் முறியெடுத்து முன்னேறும் நிலையையும் இந்த செவ்வாய் உச்சம் ஏற்படுத்தி தரும். 

ஏற்கெனவே மகர ராசிக்காரர்கள் பாதசனி பாதிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவது, மிகப்பெரிய பலத்தை உங்களுக்கு நிலம் சார்ந்த விஷயங்களில் தரும். 

நிலம் வாங்குவதில் இருந்த தடை, வீடு வாங்குவதில் இருந்த தடை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவி உறவில் இணக்கம் உண்டாகும். முயற்சி தடைகள் நீங்குவதற்கு ஏற்க காலமாக இது இருக்கும். 

செவ்வாய் உச்சத்தால் தைரியம் கூடுவதாக இருக்கும், இது ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் தரும். நேருக்கு நேர் நின்று எதிர்களை சமாளிக்க கூடிய தைரியம் இந்த பிப்ரவரி மாதம் ஏற்படும்.

இல்லற வாழ்கையை வலிமையாக கட்டமைத்துக் கொள்வதற்கான தைரியத்தை செவ்வாய் பகவான் தருவார். 

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்