சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! விரைவில் வெளியே வருகிறார்! நீதிமன்றம் அதிரடி!
By Kathiravan V Aug 09, 2024
Hindustan Times Tamil
சவுக்கு சங்கரின் தாயர் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது மகன் சவுக்கு சங்கரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்து உள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் மீது வேறு வழக்கு இல்லை என்றால் அவரை விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர். இதனால் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை ஆபாசமாக பேசிய வழக்கு, மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் ஜாமீன் பெற்று உள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் விடுதலை ஆவதற்கு தடையாக இருந்தது. ஏனெனியில் எந்த வழக்கில் சிறையில் இருந்தாலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தால் அவர் விடுதலை ஆக முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால் தற்போது அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.
பணம் சம்பாதிப்பதில் புரட்டி எடுக்க போகும் மகரம் ராசி! புரட்டாசி மாத ராசிபலன்கள்!