கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய பழமாக இருந்து வரும் லிச்சியில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 15, 2024

Hindustan Times
Tamil

இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை மிகுந்த பழமாக லிச்சி உள்ளது. கோடை காலத்தில் கிடைக்கூடிய சீசன் பழமாக லிச்சி உள்ளது

ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது, இதய ஆரோக்கியம், எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது லிச்சி பழம்

இதில் இருக்கும் பிளேவனாய்ட்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது

ரத்த சர்க்கரை அளவை குறைத்து ஹைபர்டென்ஷன் தொடர்பான ஆபத்தை குறைக்கிறது

குறைவான ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக இருதய செயல்பாட்டை மேம்படுத்தி, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

குறைவான கலோரி, அதிக அளவிலான நார்ச்சத்து போன்றவை எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது

வைட்டமின் சி, கே, ஈ ஆகியவற்றுடன் பி வைட்டமின்களான பி6 இருப்பதால் பல்வேறு வைட்டமின்களின் களஞ்சியமாக இருக்கிறது

இயற்கையான வலி நிவாரணியாக இருந்து வரும் லிச்சி பழத்தில் அழற்ச்சிக்கு எதிரான பண்புகள் இருப்பதுடன், திசுக்கள் சேதமாவதை தடுக்கிறது

இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இதனால் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கிறது

சருமம் பளபளப்பை பெற உதவுகிறது. முகப்பரு கறைகள் மற்றும் புள்ளிகள், அவற்றின் ஊட்டமளிக்கும் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்து உதவுகிறது

மே 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்