உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது டயட்டில் சேர்க்க வேண்டிய கலோரி குறைவான உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 05, 2024

Hindustan Times
Tamil

கலோரி அதிகமான உணவை சாப்பிட்டால் எடை அதிகரிப்பு ஏற்படும். எனவே உடல் எடை இழக்க கலோரி கட்டுக்குள் இருக்கும் உணவை சாப்பிட வேண்டும்

டயட்ரி நார்ச்சத்து, நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழமாக ஆப்பிள் உள்ளது. குறைவான கலோரிகளை கொண்டிருப்பதுடன் எடை குறைப்பு டயட்டில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய உணவாக உள்ளது

குறைந்த கலோரிகள், வைட்டமின், தாதுக்கள், டயட்ரி நார்ச்சத்து மிக்க காய்கறியாக பீட்ரூட் உள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து செரிமானத்து உதவுவதுடன், உடலை நீரேற்றமாக வைத்து எடைகுறைப்பை ஊக்கப்படுத்துகிறது

வாட்டர் கிரெஸ் என்று அழைக்கப்படும் கீரை வகை மிகவும் குறைவான கலோரிகளை கொண்டிருப்பதோடு வைட்டமின் சி,கே நிறைந்து காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடை குறைப்புக்கு உதவுகிறது

பனிப்பாறை கீரை என்று அழைக்கப்படும் ஐஸ்பெர்க் லெட்டுஸ்  கலோரி குறைவாக இருப்பதுடன் தாதுக்களான இரும்பு, மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுகிறது. செல் சேதமடைவடை தடுக்கிறது

அதிக நீர்ச்சத்து கொண்டிருக்கும் வெள்ளரி குறைவான கலோரிகளை கொண்டிருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்த தேர்வாக உள்ளது

பொட்டாசியம், போலேட், வைட்டமின் சி நிரம்பியிருக்கும் முள்ளங்கி கலோரி குறைவான காய்கறியாகவும், எடை குறைப்புக்கு உதவு உணவாகவும் உள்ளது

சிவரி கீரை என்று அழைக்கப்படும் செலரியில் இருக்கும் கரையாத நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருவதுடன், கலோரி உட்கொள்ளலை தடுத்து எடை இழப்புக்கு உதவுகிறது

அதிகம் பேரால விரும்பு சாப்பிடக்கூடிய கீரையாக இருக்கும் பசலை கீரை வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பியுள்ளது. இது பசி உணர்வை கட்டுப்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது

மிளகு கீரை அல்லது புதினா மியாக்ரீ கலோரிகளை கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் கார்ப்போஹைட்ரேட்கள் எடை குறைப்புக்கு ஆதரவு அளித்து செரிமானத்துக்கும் உதவுகிறது

குறைவான கலோரி மிக்க உணவுகள் காளான்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி, புரதம் அதிகமாக காணப்படுகிறது. இதில் பசியை குறைத்து, எடை இழப்புக்கு ஆதரவு அளிக்கிறது

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?