குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan May 14, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
Canva
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மே மாதம் 14ஆம் தேதி முதல் மிதுன ராசியில் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
Canva
குரு பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
விருச்சிக ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவலையான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.
Canva
மகர ராசி: குருபகவான் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கும் என கூறப்படுகிறது. எடுக்கும் முடிவுகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. பெரிய சிக்கல்கள் உங்களுக்கு தேடி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
மீன ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் பல நெருக்கடிகள் ஏற்படும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.