மீன் உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் எத்தனை நன்மைகள் பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 01, 2024

Hindustan Times
Tamil

மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.

Pexels

மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்ட மீன்களில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Pexels

உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.

Pexels

உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Pexels

மன அழுத்தத்தை போக்க மீன்கள் உதவுகின்றன. இது மன நிலை, மன சோர்வு, குறைவான பலம் மற்றும் வாழ்வில் ஆர்வமின்மை ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

pixa bay

மீன்களில் இருந்து அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. மீன் எண்ணெய்களிலும் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. அது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

pixa bay

அசைவ உணவுகள் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

pixa bay

கிழங்கான் மீன்களில் கருப்பு கிழங்கான், வெள்ளை கிழங்கான் என இரண்டு வகை மீன்கள் உள்ளன. கிழங்கான் மீனை சாப்பிடுவதால் மூல நோய் பிரச்னைகள் குணமாகவும். 

pixa bay

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கான் மீனை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.

pixa bay

உடலில் சோம்பு செய்யும் வேலைகள்