கேரளா என்றதும் நம் நினைவுக்கு வரும் சில விஷயங்களைப் பட்டியலிடலாமா?

By Marimuthu M
Apr 27, 2025

Hindustan Times
Tamil

ஆழப்புழா(Alappuzha) நகரில் இருக்கும் உப்பங்கழி எனப்படும் காயல் மிக அழகான நீர் வழித்தடம் ஆகும்.இதில் கேரள அரசு, பயணிகளுக்கான படகு போக்குவரத்தை மேற்கொள்கிறது. 

ஆழப்புழா நகரில் இருக்கும் படகு வீடுகள் புதுமணத்தம்பதிகளின் ஹனிமூனுக்கு ஏற்ற சிறந்த ஸ்பாட்டாக இருக்கிறது. 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தேயிலைத்தோட்டங்கள் பலரையும் ஈர்க்கும் தன்மைகொண்டவை! 

கேரளாவில் பாரம்பரிய நடனமான கதகளி மூலம் நடனமாடிக்கொண்டே கதை சொல்லப்படுகிறது.இது கேரளா என்றதும் சட்டென நினைவுக்கு வரும் ஒன்று. 

பசுமை என்பது கேரளாவின் 14 மாவட்டங்களில் இருக்கும் ஒரு அடையாளமாக மாறிவிட்டது. அந்தளவுக்கு கேரளாவின் வழியெங்கும் இருமருங்கிலும் மரங்கள் இருக்கின்றன. 

கேரளா என்றதும் தெய்யம் நடனக்கலை நம் நினைவுக்கு வருவதுண்டு. தெய்யம் (Theyyam) என்பது கேரளாவின் வடகிழக்கு பகுதியில், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆன்மிக அடிப்படையிலான வழிபாடு ஆகும். இதனை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உண்டு. 

கேரளாவில் இந்தியாவிலேயே கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். கிடைக்கும் சின்னஞ்சிறு பகுதிகளிலும் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை கால்பந்து விளையாடுவதைப் பார்க்க முடியும். அதேபோல் பல உலக அளவிலான கால்பந்து அணியினருக்கு அங்கு ரசிகர்கள் ஏராளம். 

உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்

Photo Credit: Pexels