தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் தானிய வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 10, 2024

Hindustan Times
Tamil

தலைமுடி நன்கு வளர்வதற்கு நாம் பின்பற்றும் டயட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி தலைமுடி தொடர்பான பிரச்னைகளுக்கு  தீர்வு அளிக்கும்

குயினோவா

புரதம் அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கும் குயினோவா தலை முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதில் இடம்பிடித்திருக்கும் இரும்பு, துத்தநாகம் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் தலை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

கோதுமை

கோதுமையால் செய்யப்படும் உணவுகளில் வைட்டமின்கள், துத்தநாகம், இருப்பு சத்து நிறைந்திருப்பதால் அவை முடி உதிர்வை தடுத்து, தலைமுடி வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.  இதில் இருக்கும் தாதுக்கள் வேர்களுக்கு ஊட்டமளித்து, மயிர்கால்களை தூண்டுகிறது

ஓட்ஸ்

துத்தநாகம், பயோடீன், வைட்டமின்கள் தலைமுடியை வலுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பயோடீன் முடி உதிர்வை தடுக்கிறது. துத்தநாம் கொலஜென் உற்பத்திக்கு  ஆதரவு தருவதோடு முடி சேதமடைவதை தடுக்கிறது

பார்லி

நார்ச்சத்து, இரும்பு, துத்தநாகம் மிக்க பார்லி தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. முடி அடர்த்தியாக வளரவும், பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது

பிரவுன் அரிசி

கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசி என்று அழைக்கப்படும் பிரவுன் அரிசி கார்ப்போஹைட்ரேட்கள், வைட்டமின் பி ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இவை முடி நுண்ணரைகளுக்கு ஊட்டமளித்து ஒட்டு மொத்த தலைமுடி ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கிறது. தலைமுடி உயர்வை தடுப்பதோடு முடியை வலுப்படுத்துகிறது

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ கோடிகளை குவிக்கும் கேள யோகம் யாருக்கு?