சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தை சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 07, 2024

Hindustan Times
Tamil

நாம் பின்பற்றும் டயட் பழக்கம் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பளபளப்பான சருமத்தை பெறவும், அதன் ஆரோக்கியத்தை பேனி காக்க உதவும் காய்கறிகள் எவை என்பதை பார்க்கலாம்

கேல் கீரை

பரட்டை கீரை என்று அழைக்கப்படும் கேல் கீரையில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி கோலாஜென் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதனால் சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது

ப்ரோக்கோலி

வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோடீன் நிறைந்திருக்கும் ப்ரோக்கோலி ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படுவதில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது

சீனிகிழங்கு

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, பீட்டா கரோடீன் கொண்டிருக்கும் சீனிகிழங்கு சுருக்கங்கள், சரும வறட்சி, வெயில் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது

கேரட்

வைட்டமின் ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கார்டினாய்ட்களை கொண்டிருக்கும் கேரட் சருமம் சேதம் அடைவதற்கு எதிராக போராடுவதுடன், கருமையை குறைக்கிறது

தக்காளி

லைகோபீன், லூடீன் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் தக்காளி இயற்கையான பளபளப்பை தக்க வைக்க உதவுகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தடுக்கிறது

மருத்துவ குணநலன்கள் கொண்ட எண்ணெய்யாக இருந்து யூகலிப்டஸ் எண்ணெய்யின் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்