குளிர் காலத்தில் சாப்பிட உகந்த ஊறுகாய் வகைகளும் அதனால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளையும் பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 30, 2024

Hindustan Times
Tamil

கோடை காலத்தை காட்டிலும் குளிர் காலத்தில் ஊறுகாய் சாப்பிடுவதால் திருப்திகரமாக இருப்பதுடன் உடல் நலத்திலும் சில ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

நெல்லிக்காய் ஊறுகாய் 

லேசாக புளிப்பும், கசப்பும் கொண்ட சுவையுடன் இருக்கும் நெல்லிக்காய் ஊறுகாயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக வைத்து கொள்ள உதவுகிறது

மாங்காய் ஊறுகாய்

கோடை காலத்தை போல் குளிர் காலத்திலும் சில மாங்காய் வகைகள் விளைகின்றன. இனிப்பும், காரமும் சமநிலையாக கொண்ட சுவையுடன் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன

எலுமிச்சை ஊறுகாய்

சிட்ரஸ் வகையாக இருந்து வரும் எலுமிச்சை ஊறுகாய் புளிப்பு சுவையுடன் இருப்பதுடன் அரிசி சாதம். பருப்பு சாதத்துக்கு சிறந்த காம்போவாக இருக்கும். குளிர் காலத்துக்கான பல்வேறு உணவுகளுக்கு சிறந்த காம்போவாக இருக்கும்

பச்சை மிளகாய் ஊறுகாய்

காரம் மிக்க ஊறுகாய் வகையாக இருக்கும் இவை உங்களது உணவின் காரத்தன்மையை அதிகரிக்கும்

கேரட் மற்றும் முள்ளங்கி ஊறுகாய்

வண்ணமயமாக இருக்கும் இந்த ஊறுகாயில் சில நறுமண மசாலா பொருள்களை சேர்த்தால் சுவை மிகுதியாக இருக்கும். ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டதாக இந்த ஊறுகாய் உள்ளது

காகம் கரைந்தால்  சில சகுணங்கள்