ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 06, 2024
Hindustan Times Tamil
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சோர்வு, ரத்த சோகை உள்பட பல்வேறு விதமான உடல் ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படலாம். எனவே ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் நிறைந்த டயட்டை பின்பற்றுவதன் மூலம் ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்கலாம்
மாதுளை பழம்
வைட்டமின் கே, சி, நார்ச்சத்து, பொட்டாசியம், புரதம் நிறைந்த பழமாக மாதுளை உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் சி, இரும்பு சத்துக்களை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது
ஆப்பிள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பிளேவனாய்ட்கள், டயர்ட்ரி நார்ச்சத்துகள், இரும்பு சத்து போன்றவை ஆப்பிளில் இருப்பதுடன் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்து சோகை பாதிப்பை தடுக்க ஆப்பிள் பழத்தை அதிகமாக சாப்பிடலாம்
ஆரஞ்சு
வைட்டமின் சி நிறைந்திருக்கும் ஆரஞ்சு இரும்பு சத்துக்களை உறிஞ்சுவதை ஊக்கப்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வைட்டமின் பி6 ஹீமோகுளோபின் ஒருங்கிணைப்பை துரிதமாக்குகிறது
பெர்ரி பழங்கள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, வைட்டமின் சி போன்றவை நிறைந்திருக்கும் பெர்ரி பழங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. ரத்த சோகையை தடுக்க உதவும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை தருகிறது
தர்ப்பூசணி
நீர்சத்து மிக்க பழமாக இருக்கும் தர்ப்பூசணியில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளன. சிவப்பு ரத்து அணுக்கள் உருவாக உதவுகிறது. இதில் இருக்கும் இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது
ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்னைகள் நீங்க என்ன உணவுகளை எடுக்கலாம்?