தலைமுடி வளர்ச்சியை நன்கு ஊக்கப்படுத்தும் பழங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 29, 2024

Hindustan Times
Tamil

தலை முடி வளர்ச்சிக்கு  உங்களது டயட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. பளபளப்பான, ஆரோக்கியமான தலைமுடியை இயற்கையான முறையில் பெற உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, பிளாக்பெர்ரி என பெர்ரி பழங்களில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடி மயிர்கால்கள் தீங்கு விளைவிக்கும் ரெடிக்கல்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது

அவகோடா

வைட்டமின் ஈ, ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்திருக்கும் அவகோடா பழங்கள் உச்சந்தலையில் ஊட்டமளித்து தலைமுடியை வலுபெற செய்கிறது

பப்பாளி

வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் பப்பாளி பொடுகு ஏற்படுவதை குறைத்து, தலை முடியை ஆரோக்கியமான வளர உதவுகிறது

ஆப்ரிகாட்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் நிறைந்திருக்கும் ஆப்ரிகாட்கள் தலைமுடி உதிர்வை தடுக்கிறது

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்