வீட்டிலேயே ஸ்ட்ரீட் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் ரெசிபி டிரை பண்ணலாமா!
Pexels
By Pandeeswari Gurusamy
Jan 10, 2025
Hindustan Times
Tamil
தேவையான பொருட்கள் - நறுக்கிய கேப்சிகம், துருவிய கேரட், பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், நறுக்கிய ப்ரோக்கோலி, நறுக்கிய வெங்காயம்,
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வினிகர், சோயா சாஸ், சுவைக்கு உப்பு, மிளகு, புழுங்கல் அரிசி சாதம், ஆலிவ் எண்ணெய்
முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கி, அனைத்து பொருட்களையும் தயார் செய்யவும்.
ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து 10 விநாடிகள் வதக்கவும், இப்போது கேரட் மற்றும் ப்ரோக்கோலி சேர்த்து 1-2 நிமிடங்கள் அதிக தீயில் வதக்கவும்.
இப்போது அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் கருப்பு மிளகு மற்றும் வினிகர் சேர்க்கவும்.
சோயா சாஸ் சேர்த்து, வேகவைத்த புழுங்கல் அரிசி சாததத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவு தான் வீட்டிலேயே ஸ்ட்ரீட் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் ரெடி
எடை இழப்பு
க்ளிக் செய்யவும்