வீட்டிலேயே  குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான நூடுல்ஸ் தயார் செய்வது எப்படி பார்க்கலாமா!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 09, 2025

Hindustan Times
Tamil

குழந்தைகள் நூடுல்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள். பெரியவர்களுக்கும் அது மிகவும் பிடிக்கும. அதை வீட்டிலேயே ருசியாக தயார் செய்யுங்கள்.

pixabay

தேவையான பொருட்கள் : கோதுமை மாவு, தண்ணீர், உப்பு, உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் சோயா சாஸ்.

pixa bay

முதலில் கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்பு கலந்து மென்மையான மாவை பிசைந்து  தயார் செய்ய வேண்டும்.

pixabay

மாவை மெல்லியதாக உருட்டி நீளவாக்கில் நறுக்கவும். பின்னர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இந்த நறுக்கிய நூடுல்ஸை கொதிக்கும் நீரில் கலந்து சமைக்கவும்.

pixabay

உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நறுக்கவும். முட்டைக்கோஸ், குடமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளலாம். கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் விட்டு வதக்கவும்.

pixabay

பின்னர் கடாயில் வதக்கிய காய்கறிகளுடன் சமைத்த நூடுல்ஸை கலக்கவும். தேவையான அளவு சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.

pixa bay

இப்போது சுவைக்கு தகுந்தவாறு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான நூடுல்ஸ் சாப்பிட தயாராக இருக்கும்.

pixabay

இந்த உணவை சூடாக பரிமாறவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் விரும்பலாம்.

pixa bay

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva