அம்மன் விரத வழிபாடும் அதன் பலன்களும் குறித்து இங்கே காண்போம்

adhiparashakthi Instagram

By Stalin Navaneethakrishnan
Jul 11, 2023

Hindustan Times
Tamil

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் பல்வேறு விதமான விசேஷ நலன்கள் கிடைக்கும்

மதுரை மீனாட்சி அம்மனை விரதமிருந்து வழிபாடு செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்தடை, வேலை தடை உள்ளிட்ட அனைத்து விதமான தடைகளும் விலகும்

காமாட்சி அம்மனை விரதமிருந்து வழிபாடு செய்தால் தீராத துன்பங்கள் அனைத்தும் விரைவில் தீரும் எனக் கூறப்படுகிறது. கஷ்டங்களை போக்கக்கூடிய தெய்வங்களில் இவரும் ஒருவர்.

இருக்கன்குடி மாரியம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கை, கால், வயிறு, கண் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் வழிபாட்டின் மூலம் விலகும் எனக் கூறப்படுகிறது.

 அமாவாசை, பௌர்ணமி விரதம் இருந்து சமயபுரம் மாரியம்மன் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என கூறப்படுகிறது. கோயிலில் இருக்கக்கூடிய புனித நீரில் நீராடி அம்மனை வழிபாடு செய்தால் வெற்றிகள் குவியும் 

வெக்காளி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை வரும் என கூறப்படுகிறது. பிள்ளை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளம். நினைத்த வேண்டுதலை மனதார அவனிடம் கூறினால் வேண்டுதல் நிறைவேறும்

பஞ்சமி திதி தினத்தில் இந்த வாராஹி அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்ததாகும். அன்றைய தினம் விரலி மஞ்சள் மாலை அணிவித்து அம்மனை வழிபட்டால் திருமணத் தடை விலகும் எனக் கூறப்படுகிறது.

இந்த அம்மன் மட்டுமில்லாது அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோயில்களுக்குச் சென்று பக்தர்கள் வழிபாடு செய்தால் உங்களுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்