எளிமையாக முட்டை புர்ஜி செய்வது எப்படி என அறிந்து கொள்வோமா?
By Marimuthu M May 11, 2025
Hindustan Times Tamil
முட்டை புர்ஜி செய்யத் தேவையான பொருட்கள்: முட்டை – 3,
வெங்காயம் – 1 (நறுக்கியது),
தக்காளி – 1 (நறுக்கியது),
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது),
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
முட்டை புர்ஜி செய்யத் தேவையான பொருட்கள்: மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)
முட்டை புர்ஜி செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் வெந்துவரும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.தக்காளியையும் சேர்த்து நன்கு நெரிந்து, அது நன்கு மசியும் வரை வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பை சேர்க்கவும்.சிறிது நீர் தெளித்து, மசாலா வாசனை தீரும் வரை வதக்கவும்.
முட்டையை நேரடியாக ஊற்றவும் அல்லது ஒரு பாத்திரத்தில் அடித்து ஊற்றவும்.உடனடியாக கிளறத் தொடங்கவும்.
நன்கு கிளறி, முட்டை சுருள் சுருளாக மாறும் வரை வதக்கவும். பின், அதன்மேல், கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!