காளான் பிரியாணி எப்படி செய்வது என அறிந்து கொள்வோமா?

By Marimuthu M
Mar 24, 2025

Hindustan Times
Tamil

காளான் பிரியாணி செய்யத் தேவையான பொருட்கள்: காளான் - 250 கிராம், பாசுமதி அரிசி - 1 கப்,  பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், 

காளான் பிரியாணி செய்யத் தேவையான பொருட்கள்: பட்டாணி, கேரட் - சிறிதளவு,   கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி,  மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,  நெய் - 1 டேபிள்ஸ்பூன்,  உப்பு, மல்லித்தழை, புதினாத்தழை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - தேவையான அளவு,  நீர் - 2 கப் 

பிரியாணிக்கு தேவையான பாசுமதி அரிசியை எடுத்துக் கொண்டு, அதை 20 நிமிடங்கள் ஊறவைத்து வடித்து எடுக்கவும். அதன் பின் தேவையான அளவு காளானை எடுத்து, தண்ணீரில் நன்றாக கழுவி, பின் பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அதன் முழு மசாலாக்களையும் அதில் போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, மசாலா உடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்குவேகவிடவும். அதன் பின் மிளகாய்தூள், மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் காளான் துண்டுகளை சேர்த்து, அதனுடன் மல்லித்தழை மற்றும் புதினத்தழையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்.

இப்போது மசாலா தயாராக இருக்கும் போது, அரிசியை அதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து மூடவும். அதன் பின் 20 நிமிடங்கள் வரை, வேக விடவும். 

அந்த நேரத்தில் மிதமான சூட்டில் கம கம காளான் பிரியாணி நன்கு வெந்து வந்திருக்கும்.  

நேற்றைய தினம் (20 -04-2025) அமீர் - பாவனி திருமணம் கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அமீரின் தாயார் மற்றும் சகோதரி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.