வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்வது பற்றி அறிந்துகொள்வோமா?
By Marimuthu M Mar 25, 2025
Hindustan Times Tamil
முட்டை பப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப்,
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
முட்டை - 2,
முட்டை பப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்: மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
பால் - பப்ஸ் மேல் தொட்டு தேய்க்கும் அளவுக்கு,
எண்ணெய் - பப்ஸ் மேல் தொட்டு தேய்க்கும் அளவுக்கு,
நீர் - முக்கால் கப்
முட்டை பப்ஸ் செய்முறை: ஒரு பவுலில் மைதா மாவையும் வெண்ணெயையும் உப்பினையும் நீரையும் சேர்ந்து நன்கு பிசைந்து சப்பாத்திபோல் தேய்த்து, ஒன்றின்மேல் லேயர் லேயராக போட்டு வைத்துக்கொள்ளவும். இதை மடித்து ஒரு மணிநேரம் ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் அவித்த முட்டையை, பாதியாகக் கீறி, எண்ணெய், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கிக்கொள்ளவும்.
பின் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்தாக நாம் ஃபிரிட்ஜில் எடுத்துவைத்த மடித்த மாவை, மீண்டும் ஒரு நான்கைந்து முறை தேய்த்துக்கொண்டு, நீளமாக பரப்பவும். அதில் பப்ஸ் அளவுக்கு, வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் நாம் தயார் செய்துவைத்த முட்டைக்கறியை நடுவில் வைத்து, நீர் தொட்டு மூடிக்கொள்ளவும்.
பின்னர் அதன்மேல் சிறிது எண்ணெயையும், பாலையும் வைத்து தொட்டு, பப்ஸ் மாவின் மேல் தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பேனில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் ஒரு 15 நிமிடங்கள் வைத்து திருப்பி, திருப்பி போட்டு எடுக்கவும்.சூடான சுவையான
முட்டை பப்ஸ் தயார்
கோடைக் காலத்தில் நாம் சாப்பிடும் காலை உணவே அந்த நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை தருகிறது. கோடைக் காலத்தில் சாப்பிட எளிதான காலை உணவுகளை இங்கு காண்போம்.