'கடும் குளிரில் லடாக்கில் கொதித்து எழுந்த மக்கள்! ’ ஏன் தெரியுமா?
By Kathiravan V Feb 06, 2024
Hindustan Times Tamil
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக் கோரி, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கடுமையான குளிரையும் மீறி லே பகுதிகளில் பேரணி நடத்தியது பேசு பொருள் ஆகி உள்ளது.
6 வது அட்டவணை, மாநில அந்தஸ்து, நிலம், வேலைப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்றத்தில் தனி மக்களவைத் தொகுதி ஆகியவற்றை அமல்படுத்தக் கோரி, கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) மற்றும் லே அபெக்ஸ் பாடி (எல்ஏபி) ஆகிய கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன
லே அபெக்ஸ் பாடி (LAB) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) ஆகிய அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது
லடாக்கின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்க மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது
கார்கில் ஜனநாயக கூட்டணியின் சட்ட ஆலோசகர் ஹாஜி குலாம் முஸ்தபாவின் கூற்றுப்படி, அனைத்து மக்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களும் பலவீனமடைந்துள்ளன என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்
ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.