குழந்தைகளை படிக்க வைக்க அவர்களை எப்படி ஊக்குவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
By Priyadarshini R Mar 14, 2025
Hindustan Times Tamil
குழந்தைகளுக்கு ஒரு வழக்கத்தை உருவாக்குவது சிறந்தது. ஏனெனில் நீங்கள் அவர்களுக்கு படிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் அந்த நேரத்தில் தினமும் படிக்க அவர்களின் மூளை பழக்கப்படுத்திக்கொள்ளும்.
மைன்ட் மேப், குவிக் ரிவிஷனுக்கு குறிப்புக்களை எழுதிவைத்து படித்தல் போன்ற முறைகளை பின்பற்றவேண்டும்.
சந்தடி நிறைந்த அல்லது பரபரப்பான படிக்கும் சூழல் இருந்தால் குழந்தைகளின் கவனம் சிதற வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கான அமைதியான மற்றும் சவுகர்யமான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொடுக்கவேண்டும்.
உங்கள் குழந்தைகளின் முயற்சிகளை நீங்கள் அங்கீகரிக்கும்போது, அவர்களுக்கு ஊக்கம் கிடைத்ததாக அவர்கள் உணர்கிறார்கள்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரைத் தான் எப்போதும் பின்பற்றுவார்கள். அவர்கள் புத்தகம் வாசிப்பதை குழந்தைகள் பார்த்தால் அல்லது புதிய திறன்களை கற்பதை பார்த்தால் அல்லது கல்வி குறித்து நேர்மறையாக அவர்கள் பேசுவதை பாத்தால் குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள்.
சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதை முடிக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
தனியாக அமர்ந்து படிப்பது குழந்தைகளுக்கு போர் அடிக்கும். எனவே அவர்கள் தங்களின் நண்பர்களுடன் இணைந்து படிக்கலாம். இதனால் அவர்கள் உற்சாகமாவார்கள். எனவே அவர்களின் பள்ளித்தோழர்களுடன் இணைந்து படிக்கும் நேரத்தை உருவாக்குங்கள்.
செம டேஸ்ட்டான தேங்காய் லட்டு.. வாயில் வைத்ததும் கரையும்.. உடனே செய்து பாருங்க!