உங்கள் மதிப்பினை உயர்த்தும் பேசும் விதங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்?

By Marimuthu M
Jun 25, 2024

Hindustan Times
Tamil

புதிய நபர்களைச் சந்தித்தவுடன் நிறைய பேசக் கூடாது, தன்னை உயர்த்தியும் பேசக் கூடாது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேச வேண்டும். 

நீங்கள் சொல்ல விரும்புவதை சம்பந்தமே இல்லாத ஒன்றில் தொடங்கி, குழப்பிப் பேசாதீர்கள். இது உங்களை அனுபவமற்றவராக காட்டும். நினைத்ததை மட்டும் நேர்படப் பேசுங்கள்.

நினைத்ததைச் சொல்லும்போது எதிரில் இருப்பவர்களுக்கு அது பிடிக்காததாக இருக்கலாம். அந்த சூழலில் மெதுவாக, பொறுமையாக, தன்மையாகப் பிறர் மனம் புண்படாத வகையில் சொல்லுங்கள். 

ஒரு நபர் சண்டைபோடும் வகையில், வாக்குவாதத்தில் செயல்படும் வகையில் பேசும்போது, அமைதியாகப் பேசுங்கள். அப்போதுதான் உங்கள் தரப்பு நியாயத்தை சரியாக எடுத்துக் கூறமுடியும். 

ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசாதீர்கள்.அது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரியவரும்போது உங்களைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் குறையும். 

தாய், தந்தையுடன் பேசும்போது அன்பாகவும், சகோதர சகோதரியிடம் அளவாகவும், துணைவியுடம் நேர்மையாகவும்  பேசுங்கள். 

மேல் அலுவலர்களிடம் பணிவாகவும், தொழிலாளிகளிடம் மனிதநேயத்தோடும் பேசுங்கள். 

கணவன் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், மனைவி கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் பிராக்டிக்கலாகவும் பேசுங்கள். 

மோரில் இருக்கும் நன்மைகள்