நடிகை மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன்.
ஐஸ்வர்யா மற்றும் பிரிகேடியர் ஜெய்பாவ் கொன்னூர் தம்பதிகளுக்கு பெங்களூருவில் 1979ஆம் ஆண்டு பிறந்தவர், மாளவிகா.
நடிகை மாளவிகா தனது 19 வயதில் ’உன்னைத் தேடி’ என்னும் படத்தில் நடிகர் அஜித் குமாருடன் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்.
’ஆனந்த பூங்காற்றே’ திரைப்படத்திலும் நடிகர் அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடிகை மாளவிகா நடித்திருந்தார்.
2000ஆம் ஆண்டு வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்னும் பாட்டில் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.
2004ஆம் ஆண்டுக்குப்பின் சின்ன வேடங்களிலும் கிளாமர் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார், நடிகை மாளவிகா.
பேரழகன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், அய்யா, சந்திரமுகி, திருட்டுப்பயலே, சித்திரம்பேசுதடி, திருமகன், நான் அவனில்லை ஆகிய படங்களில் குறையநேரம் வந்தாலும் ஸ்கோர் செய்தார், மாளவிகா.
நடிகை மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டபிள்யூபிஎல் ஏலம் வரும் 15ம் தேதி பெங்களூரில் நடக்கிறது