ராகி வேர்கடலை வச்சு இப்படி ஒரு தித்திக்கும்  லட்டு செய்து பாருங்க..  சத்தானதும் கூட

Canva

By Pandeeswari Gurusamy
Mar 13, 2025

Hindustan Times
Tamil

ராகியையும் வேர்க்கடலையையும் சேர்த்து லட்டு எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளலாம், இது சுவையாக மட்டுமல்லாமல் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

Canva

தேவையான பொருட்கள்: நெய் - இரண்டு ஸ்பூன், ராகி மாவு - கால் கப், வேர்கடலை - அரை கப், வெல்லம் துருவல் - மூன்று கால் கப், நீர் - கால் கப், ஏலக்காய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - சிறிதளவு

pixabay

ஒரு பேனில் வேர்கடலையை போட்டு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். வறுத்த வேர்கடலை நன்றாக சூடு ஆறிய பிறகு, மிக்ஸியில போட்டு நைசாக பொடி பண்ணி வைத்து கொள்ள வேண்டும். இப்போது அதே பேனில நெய் விட வேண்டும். நெய் சூடான பிறகு, அதில் ராகி மாவு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

Pixabay

ஐந்து நிமிஷம் சிம்மில் வறுத்து, ஒரு பாத்திரத்துல எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்ப ஒரு கலக்கும் பாத்திரம் எடுத்து, அதில் வறுத்த ராகி மாவு, பொடி செய்து வைத்த வேர்கடலை பொடியை போட்டு நல்லா கலந்து கொள்ள வேண்டும்.

Pixabay

பின்னர் ஒரு பேனில் வெல்லத்தை சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி எடுக்க வேண்டும். வெல்லம் எல்லாம் கரைந்த பிறகு, அதில் ஏலக்காய் பொடி, சிறிதளவு உப்பு போட்டு கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை லேசா தடித்த பாகு வர சிம்மில் வைச்சு, பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.

Pixabay

இந்த கலவையை லேசா தடித்த பாகு வர சிம்மில் வைச்சு, பிறகு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். இந்த பாகுவை எடுத்து, முன்ன கலந்து வைச்ச ராகி மாவு, வேர்கடலை பொடி கலவையில சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

Pixabay

மாவு எல்லாம் பாகில் கலந்துட்ட பிறகு, சின்ன சின்ன உருண்டைகளாக லட்டு பிடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

Pixabay

அவ்வளவுதான் சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ராகி வேர்க்கடலை லட்டு ரெடி. இதை சூடு ஆறிய பிறகு ஒரு காற்று புகாத டப்பாவுல வைச்சு சேமிக்க வேண்டும்., ஒரு வாரம் வரைக்கும் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும்.

Pixabay

குழந்தைகள், பெரியவர்கள் வரை இதை தினமும் காலையில் ஒன்று  சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். இது மிகவும் ஈசியாக செய்யக் கூடிய ஸ்வீட் ரெசிபி.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Pixabay

வாழ்க்கையில் பொறுமை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த  பொறுமை நமக்கு பல விதமான மேன்மைகளை அடைய எளிமையாக உதவுகிறது. ஆனால் வாழ்வின் பல சூழ்நிலைகளில்பொறுமையை கடைபிடிப்பது சற்று கடினமான காரியம் தான்.