கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கம் குறித்து பேட்டிகளில் பேசிய தகவல்கள் இவை!

By Kalyani Pandiyan S
Jun 08, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து அவர் பேசும் போது, “இயக்குநர் ராஜேந்திர குமார் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவர் என்னிடம் ஒரு நாள் வந்து என்னுடைய உதவி இயக்குநர் மணி படம் இயக்குகிறார். அந்த படத்தில் அசோசியேட் டைரக்டராக என்னை பணியாற்ற கூப்பிடுகிறான். 

ஆனால், என்னுடைய அசிஸ்டன்டிடமே நானே வேலை செய்வதற்கு எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது, ஆகையால் அந்தப்படத்தில் என்னை வேலை செய்து கொடுக்கும்படி கேட்டார். நான் அப்போது சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு செய்து பிசினஸ் ஒன்றை பார்த்து வைத்திருந்தேன்.  இந்த நிலையில் அவனிடம் நான் சினிமாவை விட்டு ஒதுங்க போகிறேன். அதனால் என்னால் வேலை பார்த்து கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவன் என்னை விடுவதாக இல்லை. தொடர்ந்து என்னிடம் அது பற்றி பேசிக் கொண்டே இருந்தான். மூன்றாவது முறையாக அவன் இறங்கி வந்து கேட்ட பொழுது, எனக்கே மனம் இறங்கி விட்டது

இந்த நிலையில் அவனிடம் நான் வேலை பார்த்துக் கொடுக்கிறேன் ஆனால், நான் வேலை பார்க்க வேண்டும் என்றால், சில நிபந்தனைகள் இருக்கிறது என்று கூறி, அதில் முதல் நிபந்தனை படத்தின் கதையை நான் கேட்பேன என்றேன். ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்க்க, கதை கேட்டுதான் வேலை பார்ப்பேன் யாருமே சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் சொன்னேன். இரண்டாவது நிபந்தனையாக படப்பிடிப்பில் சிகரெட் பிடிப்பேன் என்று கூறினேன். அதற்கு அவன் ஓகே என்று சொன்னான். 

மணி என்னிடம் வந்து கதையை சொல்லும்பொழுது கூட, நான் சிகரெட் பிடித்துக் கொண்டுதான் கதையை கேட்டேன். கதையை கேட்ட போது, அந்தக்கதை எப்போதும் போல கேட்கும் கதையாக இல்லாமல் வித்தியாசமான கதையையாக இருந்தது. அதைத்தொடர்ந்துதான் நான் அந்தப்படத்தில் வேலை பார்த்தேன்.” என்று பேசினார்.

காரணம்  சொன்ன ரவிக்குமார்! நான் வேலை பார்த்த படங்களில் சிகரெட் பிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும்.  மதிய இடைவேளையில்தான்  சிகரெட் பிடிக்க நேரம் கிடைக்கும். ஆனால் அந்த வேளையில் தான் நிறைய வேலைகள் இருக்கும். அதனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்றால், மாலை தான் பிடிக்க முடியும். அதனால்தான் ராஜேந்திரகுமாரிடம் அந்த நிபந்தனையை வைத்தேன். 

தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!