தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்த பகிர்ந்த கே.ஆர். வத்சலா! அவர் பேசும் போது, “எங்களுடைய வீட்டில் அக்காதான் குடும்பத்தின் எல்லா வித பொறுப்பையும் தலையில் தூக்கிச்சுமந்தார். 

By Kalyani Pandiyan S
May 04, 2024

Hindustan Times
Tamil

அவரைப் பார்த்தாலே, எங்களுக்கு ஒரு பயம் வரும். என்னுடைய கல்யாணத்தையும் அவரே எடுத்து நடத்தி வைத்தார். ஆனால் அந்தக் கல்யாணம் முழுமையான, சந்தோஷமான வாழ்க்கையை நோக்கிச் செல்லவில்லை. இதையடுத்து நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். 

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே, என்னுடைய கணவர் அவருக்கு சரியான மனைவியாக நான் இல்லை என்று நினைத்திருக்கிறார். 

பெண்களைப் பொறுத்தவரை, நம்முடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து வைக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அது சரிவர அமைவது என்பது நம்முடைய தலையெழுத்தில்தான் இருக்கிறது. 

அந்த விஷயத்தில் என்னுடைய தாயையோ, தகப்பனையோ, அக்காவையோ நான் குறை சொல்ல முடியாது. எனக்கு பக்குவம் இல்லாத காரணத்தினால்தான், அந்த உறவை என்னால் கைகொள்ள முடியவில்லை. 

அந்த துயரச்சம்பவம், எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்தது. பெண்கள் எக்காரணத்திற்கு கொண்டும், பொருளாதார ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பின்னோக்கி இருக்கவே கூடாது.  நாம் என்றுமே நம்முடைய தனித்தன்மையோடு இருக்க வேண்டும்.” என்றார் 

மழை சீசனில் தவிர்க்க வேண்டிய உணவுகள்