தக்காளி சாப்பிடும் முன் இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க மக்களே!

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 28, 2024

Hindustan Times
Tamil

தக்காளியை உணவில் அதிகளவு பயன்படுத்தும் போது என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

pixa bay

நாம் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தக்காளி இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு தக்காளி தவிர்க்க முடியாத உணவாக மாறி இருக்கிறது. தக்காளியில் உள்ள பொட்டாசியம், இரும்புச் சத்து , விட்டமின் சி, கே, நார்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

pixa bay

உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை தக்காளியில் இருந்தாலும் அதிகளவு எடுத்துக்கொள்ளும் போது சில ஆபத்துக்களும் உள்ளன

pixa bay

தக்காளியின் புளிப்புச் சுவை அவற்றின் அமிலத் தன்மையைத் தூண்டுகிறது. எனவே, அவற்றை அதிக அளவில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கத்தை ஏற்படுத்தும். 

pixa bay

மேலும், தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி ஜீரண சக்தியை குறைத்துவிடும்.

pixa bay

தக்காளியில் அதிகமாக காணப்படும் அல்கலாய்டு உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் மூட்டுகளில் வலியை உண்டாக்கும். தக்காளியில் காணப்படும் 

pixa bay

ஆக்ஸலேட், கால்சியம் நிறைந்த உணவு வகைகளில் ஒன்றான தாக்காளியை அதிக அளவு உட்கொண்டால் மட்டுமே சிறுநீரக கற்களை உருவாக்கும். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

pixa bay

அதிகளவு அமிலங்கள் இருப்பதால் தக்காளி உங்கள் வயிற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படலாம். தக்காளியில் உள்ள சலாமெனல்லா உங்களுக்கு அதிகளவு வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். 

pixa bay

சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்குகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது.

pixa bay

தக்காளியில் அதிகளவு உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை அவற்றிலிருந்து ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது. 

pixa bay

அடிக்கடி தக்காளியை சாப்பிட்டால் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும்.

pixa bay

எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்குகேற்ப தக்காளியை அளவோடு உட்கொண்டு வளமாக வாழ்வோம்..!

pixa bay

உடலில் சோம்பு செய்யும் வேலைகள்