இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் சூப்பர் உணவுகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 27, 2024

Hindustan Times
Tamil

கரையக்கூடிய நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது

உங்கள் உணவு டயட்டில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய இதய ஆரோக்கிய சூப்பர் உணவுகள் இருக்கின்றன

அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் சாலமன் மீன்கள் வீக்கத்தை குறைக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைத்து,  இதயதுடிப்பு பாதிப்பை ஏற்படுத்து அரித்மியா ஏற்படாமல் தடுக்கிறது

கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்திருக்கும் ஓட்ஸ் கொல்ஸ்டரால் அளவை குறைத்து, அவை ரத்த ஓட்டத்தில் செல்வதை தடுக்கிறது

பெர்ரி பழங்களான பளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்பட இதர பெர்ரி பழங்கள் அனைத்திலும் ஆன்நோசையனின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கம் ஏற்படுவதை குறைக்கிறது

நட்ஸ் வகைகள் அனைத்தும் எல்டில் கொல்ஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இதய தமனி செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மையும், வீக்கத்தை குறைக்கும் பண்பும் கொண்டுள்ளது

நைட்ரேட்கள் நிறைந்திருக்கும் டார் பச்சை நிறை காய்கறிகள் ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. ரத்த அழுதத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

கார்களி ஒளிந்து கொள்ளும் எலிகளை விரட்டுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்காரில் உள்ள எலிகளை விரட்ட எளிய வழி