உங்களது அன்றாட உணவு டயட்டில் யோகர்ட் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2024

Hindustan Times
Tamil

தயிர் போல் இருக்கும் யோகர்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன

எடை குறைப்பு, எலும்புகள், இதய ஆரோக்கியம் முதல் மனநலனை பேனி காப்பது வரை யோகர்ட் சாப்பிடுவதால் பல நன்மைகளை பெறலாம்

தொடர்ந்து யோகர்ட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு அமைப்பு மேம்பட்டு பல்வேறு தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராட உதவுகிறது

குடல் இயக்கத்துக்கு ஆதரவு அளித்து, குடலில் நுண்ணுயிர் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. அத்துடன் குடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்க செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது

வீட்டிலே தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்வதோடு, டைப் 2 டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மை தருகிறது

எலும்புகளின் நிறையை, வலிமையை பராமரிக்க உதவுவதுடன், எலும்பு முறிவு, எலும்புப்புரை நோய் பாதிப்பின் ஆபத்தை குறைக்கிறது

உடலில் ஏற்படும் அழற்சி, வீக்கங்களை குறைக்கிறது. இதன்மூலம் ஓட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பேனி பாதுகாக்கப்படுகிறது

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது

அதிக புரத உள்ளடக்கம் காரணமாக வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருகிறது. இதனால் அதிக கலோரிகள் சேர்ப்பதை குறைத்து எடையிழப்புக்கு ஆதரவு அளிக்கிறது

யோகர்டில் இருக்கும் ப்ரோ பயோடிக், கவலை மற்றும் மனஅழுதத்தை தணித்து மனநல ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது  

வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?