மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 30, 2024

Hindustan Times
Tamil

மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ஆக மட்டுமல்லாமல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பல்வேறு சத்துக்களை கொண்டதாகவும் தாமரை விதை இருக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால் உடலில் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதன் விளைவாக நாள்பட்ட நோய் பாதிப்புகள் ஆபத்து குறைகிறது

குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரை அளவை நன்கு நிர்வகிக்கிறது. எனவே டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்த ஸ்நாக்ஸ் ஆக உள்ளது

அதிகமாக புரதம், நார்ச்சத்து கொண்டிருக்கும் தாமரை விதை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து பசியை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது

இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள் முகத்தில் ஏற்படும் லேசான கோடுகள், சுருக்கங்களை போக்குகிறது. சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது

பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், புரதம், நார்ச்சத்து, துத்தநாகம் இருப்பதன் காரணமாக இதயத்துக்கு நெருக்கமான ஸ்நாக்ஸ் ஆக இருக்கிறது, ரத்த அழுத்தத்தை நிர்வகித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதில் இருக்கும் அழற்சி, வீக்கத்துக்கு எதிரான பண்புகள் கீல்வாதம், மூட்டு வலி போக்குவதோடு, விறைப்புதன்மையை குறைக்கிறது. இதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது 

மாதுளை நன்மைகள்