பலரும் சாப்பிட விரும்பதாக காய்கறிகளின் ஒன்றாக கோவக்காய் இருக்கிறது. ஆனால் இதில் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன

By Muthu Vinayagam Kosalairaman
Feb 01, 2025

Hindustan Times
Tamil

கோவக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துகள், நார்ச்சத்துகள், வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் என பல சத்துக்கள் உள்ளன

ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெற்ற காய்கறியாக இருந்து வரும் கோவக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது

டயபிடிஸ்கான அருமருந்தாக கோவக்காய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் கொழுப்பு எதிர்ப்பு தன்மை ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

இதில் இருக்கும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பார்வை திறனை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

குறைவான கலோரிகள், அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடையிழப்புக்கு உதவுகிறது

கோவக்காயில் உள்ள பீட்டா கரோடீன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியை குறைக்கிறது. அத்துடன் கொலஸ்ட்ராஸ் அளவை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

கோவக்காயில் நுண்ணுயிர், பூஞ்சை எதிரான பண்புகள் இருப்பதுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால் ஃபிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து தடுப்பதோடு புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தை குறைப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது

உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!

Photo Credit: Pexels