தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலில் நிகழும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 01, 2024

Hindustan Times
Tamil

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற கூற்று உண்டு. அந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக நாள்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்களை பார்க்கலாம்

உங்களது டயட்டில் ஆப்பிளை ஏதாவது ஒரு வகையில் இடம்பிடிக்க செய்தால் உடலில் நேர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள்

இதயம், எலும்புகள் ஆரோக்கியம் முதல் உடலில் பல நன்மைகள் தருகிறது ஆப்பிள்

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களிடம் நாள்பட்ட இதய நோய் பாதிப்புகளின் ஆபத்து குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது  

புற்றுநோய் பாதிப்புக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிளில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள், பிளேவணாய்ட்கள் போன்ற சேர்மானங்கள் புற்றுநோய் செல்கள் உருவாகும் தன்மையை தடுப்பதாக கூறப்படுகிறது 

நார்ச்சத்து மிக்கதாக இருக்கும் ஆப்பிள் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. பசி உணர்வை கட்டுப்படுத்தி கலோரிகள் அதிகமாக எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க உதவுகிறது

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளில் உள்ள தாதுக்களின் அடர்த்தியை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எலும்புப்புரை பாதிப்புக்கான ஆபத்தை குறைக்கிறது

டயபிடிஸ் பாதிப்புக்கான ஆபத்தை குறைக்கிறது. நாள்தோறும் ஆப்பிள் சாப்பிடுவதால் 28 சதவீதம் வரை டைப் 3 டயபிடிலஸ் ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது

சிவப்பு கொய்யாவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!

Pexels