சரும அழகை பேனி பராமரிக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 16, 2024
Hindustan Times Tamil
பல ஆண்டுகளாக ரோஸ் வாட்டர் சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நறுமணம் மிக்கு புத்துணர்ச்சி தரும் இந்த திரவம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்ததாக உள்ளது
உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதிலும், பிஎச் சமநிலையை பராமரிப்பதிலும் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. அழற்சி, பாக்டீரியக்களுக்கான எதிரான பண்புகளை கொண்டிருப்பதால் பருக்கள் ஏற்படுவதை தடுத்து, ப்ரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது
கிளீன்சர்
ரோஸ் வாட்டரை மிதமான கிளீன்சருடன் சேர்த்து முகத்தை கழுவலாம். இந்த கலவை அழுக்குகள், துகல்களை நீக்கி சருமத்தை ஆற்றுப்படுத்தி, ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது
டோனர்
இயற்கையான டோனராக ரோஸ் வாட்டர் செயல்படுகிறது. இதிலுள்ள மென்மையான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சரும துளைகளை இறுக்கமாக்கி, பிஎச் அளவை சமநிலை செய்கிறது. சிறிய காட்டன் துனியில் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஊற்றி மெதுவாக முக்கத்தில் கிளீன் செய்வதன் மூலம் பலனை பெறலாம்
ஃபேசியல் மிஸ்ட்
ஸ்பேரே பாட்டிலில் அடைத்து ஸ்பேரே செய்வதன் மூலம் புத்துணர்ச்சி மிக்க ஃபேசியல் மிஸ்ட் ஆக செயல்படுகிறது. நாள் முழுவதும் சருத்தை நீரேற்றம் பெற வைக்க இவ்வாறு பயன்படுத்தலாம். குறிப்பாக வறட்சியான வானிலை, ஏர் கன்டிஷன் உள்ள சூழ்நிலைகளில் இவை பயனுள்ளதாக இருக்கும்
ஃபேஸ் மாஸ்க்
தேன் அல்லது யோகர்ட் போன்ற இயற்கையான பொருள்களில் மிக்ஸ் செய்து நீங்களே ஃபேஸ் மாஸ்க் ஆக தயார் செய்து கொள்ளலாம். சருமம் சிவப்பாகுதலை தடுத்து, அழற்சிகளை போக்கி ஊட்டமளிக்கிறது
கண் கீழ் பகுதி சிகிச்சை
ஒரு காட்டன் துணியில் சிறிது அளவு ரோஸ் வாட்டர் தெளித்து கண்களை மூடிக்கொண்ட மெதுவாக அழுத்துவதன் மூலம் வீக்கம் மற்றும் கரு வளையங்களை தணிக்கலாம். இதில் இருக்கும் அழற்ச்சிக்கு எதிரான பண்புகள் கண்களுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்