பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் ஆளி விதைகள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 05, 2024

Hindustan Times
Tamil

அதிக அளவில் ஆளி விதைகள் சாப்பிட்டால் சில பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் 

அலர்ஜி பாதிப்பு

அளவுக்கு அதிமான ஆளி விதைகள் அரிப்பு, சொரி, படை போன்ற அலர்ஜி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்

அழற்சியை மோசமாக்கும்

அழற்சிக்கு எதிரான பண்புகள் ஆளி விதைகளில் இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வீக்கத்தை மோசமாக்கலாம்

கர்ப்ப காலத்தில் பாதுகாப்பு இல்லை

ஈஸ்ட்ரோஜன் ஏற்படுத்தும் பாதிப்புக்கு இணையான தாக்கத்தை தர வாய்ப்பு உள்ளதால் கர்ப்ப தரித்த பெண்கள் ஆளி விதைகள் சாப்பிடுவது நல்லதல்ல 

வயிற்றுபோக்கை ஏற்படுத்தலாம்

நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுபோக்கு ஏற்படும். மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிற்று வலி போன்ற பாதிப்பையும் ஏற்படுத்தலாம்

குடலில் அடைப்பு

ஆளி விதை சாப்பிட்டு போதிய அளவில் நீர் பருகாவிட்டால் குடல் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆளி விதை சாப்பிட்டால் போதிய அளவில் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்

கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு ஏற்றது இல்லை

ஈஸ்ட்ரோஜன் பண்புகள் அதிகமாக இருப்பதுடன், ஹார்மோன்களில் மாற்றங்களும், மாதவிலக்கு சுழற்சியில் பாதிப்பும் ஏற்படும் என்பதால் கர்ப்ப தரிக்க விரும்பும் பெண்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது இல்லை

மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை தடுக்க உதவும் 4 டிப்ஸ்!

Photo Credits: Pexels