உடல் ஆரோக்கியத்தின் களஞ்சியமாக இருந்து வரும் பீட்ருட், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்
By Muthu Vinayagam Kosalairaman Mar 25, 2025
Hindustan Times Tamil
நார்ச்சத்து, அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதால் பீட்ரூட்டை பல வகைகளில் உணவுகளில் சேர்த்துகொள்கிறோம். இதில் எந்த அளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதோ பக்க விளைவுகளும் இருக்கின்றன
பீட்ரூட்டில் ஆக்சலேட்களும் இடம்பிடித்துள்ளன. இவைதான் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக காரணமாக உள்ளது. எனவே பீட்ரூட்டை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
பல்வேறு ஆய்வுகள் முடிவுகளின்படி, அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவது, வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சொல்லப்படுகிறது
பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் எனப்படும் நிறமிகள் உள்ளன, அவை சிறுநீர் மற்றும் மலத்தை சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்ற செய்யு்ம. இது பாதிப்பில்லாதது, என்றாலும் ஆனாலும் நீண்ட நாள் நீடித்தால் ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம்
பீட்ரூட்டில் அதிக நைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. இது ஹைபோடென்ஷனுக்கு (குறைந்த இரத்த அழுத்தம்) வழிவகுக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்
பீட்ரூட்டில் இருக்கும் நச்சு நீக்கும் விளைவுகள் மற்றும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் காரணமாக கல்லீரல் செயல்பாட்டில் சிரமத்தை ஏற்படுத்தலாம்
பீட்ரூட்டில் கோயிட்ரோஜன்கள் உள்ளன. அவை தைராய்டு செயல்பாடு மற்றும் அயோடின் உறிஞ்சுதலைத் தடுக்கக்கூடிய சேர்மங்களாக திகழ்கின்றன. இதனால் ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படக்கூடும்
கோடைக் காலத்தில் நாம் சாப்பிடும் காலை உணவே அந்த நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றலை தருகிறது. கோடைக் காலத்தில் சாப்பிட எளிதான காலை உணவுகளை இங்கு காண்போம்.