தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் சில விதைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Feb 03, 2024
Hindustan Times Tamil
நீங்கள் சாப்பிடும் உணவுகளும், டயட் பழக்கமும் தலைமுடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், ஊட்டச்சத்து மிக்க டயட்களை பின்பற்றுவதன் மூலமும் தலை முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்
ஆளி விதைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கும் ஆளி விதைகள் தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் இருக்கும் அடிப்படை வைட்டமின்கள் தலைமுடியை வலுவாக்க உதவுவதோடு தலைமுடி கொட்டுவதையும் குறைக்கிறது
பூசணி விதைகள்
கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் பூசணி விதைகள் தலைமுடி வளர்ச்சி நன்மை தருகிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதோடு வைட்டமின் பி, மெக்னீசியம், இருப்பு, புரதம் போன்றவை இருப்பதால் முடியை வலுவாக்கி உடைவதை தடுக்கிறது
வெந்தயம்
நிக்கோதினிக் அமிலம், லிசிதின் கொண்டிருக்கும் வெந்தயம் தலைமுடிக்கு தேவையான புரதத்தை தருகிறது. தலை முடி வளர்ச்சியை தடுத்து, அடர்த்தியாக வளர உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள் மயிர்கால்களை தூண்டுவதோடு அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
எள்ளு விதைகள்
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், பைடோஸ்டிடால்கள், பால் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை தலை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அசத்தலான 6 பலன்கள்!