ரெயின்போ டயட்டை பின்பற்றுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 04, 2024

Hindustan Times
Tamil

பல்வேறு வண்ணங்களில் இருக்கும் காய்கறிகள், பழங்களை சரி விகித அளவில் சாப்பிடுவதே ரெயின்போ டயட் என்று அழைக்கப்படுகிறது

இந்த டயட்டை பின்பற்றுவதால் சரியான அளவில் ஊட்டச்சத்துகளை பெறுவதோடு, நோய் எதிர்ப்பு அமைப்பையும் மேம்படுத்தலாம்

பல்வேறு பழங்கள், காய்கறிகளில் இடம்பிடித்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்கள் காரணமாக செல்கள் சேதம் அடைவதை தடுப்பதுடன், நீண்ட கால நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது

நாம் தேர்வு செய்து சாப்பிடும் காய்கறி, பழங்களில் இருக்கும் நிறங்கள் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை குறிக்கின்றன

பழங்கள், காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியாக பராமரிக்க உதவுகிறது

பொட்டாசியம், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறி, பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, கொல்ஸ்ட்ரால் அளவை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவுகிறது

பரவலான வண்ணங்களில் சாப்பிடுவதால் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் கிடைத்து, குறைபாட்டை நீக்குவதோடு சமநிலையை பராமரிக்கிறது

 நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் தரும் 6 சூப்பர் உணவுகள் இதோ!

pixa bay