பிளாக்பெர்ரி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 25, 2024

Hindustan Times
Tamil

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக பிளாக்பெர்ரி உள்ளது

இதய ஆரோக்கியம், புற்றுநோய் தடுப்பு, பற்கள் ஆரோக்கியம் என பிளாக்பெர்ரியில் பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது

பிளாக்பெர்ரியில் இருக்கும் ஆந்தோசயனின் இதய நோய் தடுப்புக்கு நல்லது என பல்வேறு ஆய்வுகள் முடிவில் தெரியவந்துள்ளது

பிளாக்பெர்ரியில் பொட்டசியம், வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் இருதய செயல்பாட்டுக்கு நன்மை தருகிறது

புற்றுநோய் பாதிப்பு பண்புகளுக்கு எதிரான சேர்மானங்கள் பிளாக்பெர்ரியில் இருக்கின்றன. இவை புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நொதிகளை தடுக்கிறது

வைரஸ், அழற்சிக்கு, பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் பிளாக்பெர்ரி பற்களில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது

வயிற்றில் அல்சர் பாதிப்பு, அழற்சி காரணமாக ஏற்படும் இரைப்பை பாதிப்புகள் வெகுவாக குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது

குறைவான சர்க்கரை அளவும், அதிகமா பாலிபினால் உள்ளடக்கமும் கொண்டிருக்கும் பிளாக்பெர்ரி ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான நார்ச்சத்துகளையும் தருகிறது

வைரஸுக்கு எதிரான பண்புகள் இருப்பதால் குளிரால் ஏற்படும் புண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது

பீட்ரூட்டின் நன்மைகள்