கசப்பு சுவை மிக்க உணவுகள் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் இவை தரும் நன்மைகள் ஏரளாமாக உள்ளன
By Muthu Vinayagam Kosalairaman Mar 04, 2024
Hindustan Times Tamil
கசப்பு சுவை மிக்க உணவுகள் பலருக்கும் பிடிக்காமல் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் இவை தரும் நன்மைகள் ஏரளாமாக உள்ளன
கேலே
கீரை வகையான கேலே வைட்டமின் ஏ, சி, கே சத்துக்களின் களஞ்சியமாகவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மிக்கதாகவும் உள்ளன. இதில் இடம்பிடித்திருக்கும் குளுகோஸினோலேட்ஸ் என்ற சேர்மானம் காரணமாக கசப்பு சுவை ஏற்படுகிறது. புற்றுநோய் பாதிப்பை தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
டார்க் சாக்லெட்
சாக்லெட்களில் இனிப்பு சுவை இல்லாமல் கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருப்பது டார்க் சாக்லெட். கேட்சின்ஸ், எபிகேட்சின்ஸ் போன்ற பிளேவனாய்ட்கள் காரணமாக இவற்றின் சுவை அவ்வாறு உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் கொண்ட டார்க் சாக்லெட் ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பாகற்காய்
பாகற்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. ரத்த சர்க்கரை அளவை சீராக்கி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதோடு நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கிறது
கிரேப்பழம்
கலப்பின பழமாக இருந்து வரும் கிரேப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்களான லைக்கோபின், பீட்டா கரோடீன் நிறைந்துள்ளது. இவை எடை குறைப்புக்கு உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
ப்ராக்கோலி இலைகள்
ராபின் என்றும் அழைக்கப்படும் இவை வைட்டமின் ஏ, சி, கே சத்துக்களின் சிறந்த ஆதாரமாகவும், கால்சியம், இரும்பு சத்துக்களை கொண்டவையாகவும் உள்ளது. இதில் இடம்பிடித்திருக்கும் சல்போரபோன் என்கிற சேர்மானம் அழற்சி, புற்று நோய் பாதிப்புக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது
ஏப்ரல் 21ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..