பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 09, 2024

Hindustan Times
Tamil

பிங்க் நிறத்துடன் இருக்ககூடிய பீட்ரூட் ஏராளான ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது

பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், எலெக்ட்ரோலைட்கள் அதிகமாக நிரம்பியுள்ளன. இது ஆரோக்கிய பானங்களில் ஒன்றாக உள்ளது

ஸ்டாமினா அதிகரித்தல், எடை குறைப்பு முதல் பல்வேறு நன்மைகள் பீட்ரூட் ஜூஸ் பருகுவதன் மூலம் பெறலாம்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்கள் ரத்த நாளங்களை விரவாக்கி ரிலாக்ஸ் செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

கார்டியோஸ்பிரேட்டரி செயல்பாட்டை அதிகரித்து ஸ்டாமினாவை மேம்படுத்துகிறது

பீட்ரூட் ஜூஸ் உடற்பயிற்சி சகிப்புத்தன்மையை மேம்படுத்தி தசையின் ஆற்றலை அதிகரிக்க உதவுவதால் உடல் வலிமை அதிகரிக்கும் 

குறைவான கலோரிகளை கொண்ட பீட்ரூட்டில் கொழுப்பு இல்லை. எனவை இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள், ஆற்றல் வயிறு நிரம்பிய உணர்வை தந்து எடைஇழப்புக்கு உதவுகிறது 

தண்ணீரில் கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பீட்ரூட்டில் இருப்பதால் புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது. உடலில் உள்ள நிலையற்ற மூலக்கூறுகளை அழிக்கவும் செய்கிறது

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இதோ