மூட்டு வலி பாதிப்பை குறைக்கும் பானங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 28, 2024

Hindustan Times
Tamil

உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதாலும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பானங்களை பருகுவதாலும் மூட்டு வலி பாதிப்புகள் குறைகின்றன

க்ரீன் டீ, ப்ரஷ் ஆரஞ்சு ஜூஸ் உள்பட பல பானங்கள் மூட்டு வலியை வெகுவாக குறைக்கின்றன

க்ரீன் டீ

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் க்ரீன் டீயில் இருக்கும் பாலிபினால்கள் அழற்சிக்கு எதிரான தாக்கங்களை கொண்டுள்ளது. ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை குறைத்து மூட்டு பகுதியில் வீக்கம் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது

பால்

கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக பால் உள்ளது. இது மூட்டு வலியை குறைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்துகிறது

ப்ரஷ் ஆரஞ்சு ஜூஸ்

வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் ப்ரஷ் ஆரஞ்சு ஜூஸ் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ப்ரஷ் செர்ரி ஜூஸ்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் செர்ரி ஜூஸ் மூட்டு வலி பாதிப்பையும், வீக்கத்தையும் குறைக்கிறது

தண்ணீர்

நாள்தோறும் தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தாலே மூட்டு பகுதிகள் லூப்ரிகேட் செய்யப்படும்

சோப்பில் TFM என்றால் என்ன?