எடை குறைப்புக்கு உதவும் சூப்பர் உணவுகளில் ஒன்றாக ப்ளூபெர்ரிக்கள் இருக்கிறது

By Muthu Vinayagam Kosalairaman
Jun 18, 2024

Hindustan Times
Tamil

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதன் மூலம் எடை குறைப்புக்கு உதவுகிறது ப்ளூபெர்ரி என ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது

ஏராளமான ஊட்டச்சத்துகள், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு என பல்வேறு நன்மைகள் ப்ளூபெர்ரிகளில் இருக்கின்றன

கொழுப்புகளை குறைக்கும் தன்மை ஜீன்கள் ப்ளூபெர்ரிகளில் இருப்பதாகவும், அவை வயிற்று பகுதி கொழுப்பையும், கொல்ஸ்ட்ரால் அளவையும் குறைப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது

குறைவான ட்ரைக்ளைசைராய்டுகள் கொண்டிருக்கும் ப்ளூபெர்ரிகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைப்பு திட்டத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஆதரவை தருகிறது

அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. எனவே உடல் எடையை நிர்வகிப்பதற்கான சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது

ஐந்து ப்ரோக்கோலிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அளவு வெறும் 80 கலோரிகளில் ப்ளுபெர்ரியில் உள்ளது. அத்துடன் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன

ப்ளூபெர்ரிகள் இனிப்பு, கொழுப்பு இல்லாமலும் சுவை மிகுந்ததாகவும் உள்ளது. இதனுடன் ஆரோக்கியம் மிக்க உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்

அவகேடோவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் இது எடை இழப்புக்கு உதவும், வயிற்றை நிரப்பி, பசியைக் குறைக்கவும் உதவும்