சாப்பிட்ட பின்னர் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 18, 2024

Hindustan Times
Tamil

உணவு சாப்பிட்ட பின் பலருக்கும் செரிமான பிரச்னை ஏற்படுவது இயல்புதான். இதை தவிர்க்க சாப்பிட்ட பின்னர் சிறிய நடைபயிற்சி மேற்கொண்டால் நல்ல பலனை பெறலாம். வாக்கிங்கால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

செரிமான மேம்பாடு

சாப்பிட்ட பின் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி செரிமானத்தை  தூண்ட உதவுகிறது. நாம் சாப்பிட்ட உணவு வயிறு வழியே குடலுக்கு செல்ல உதவுகிறது. இதன் மூலம் வயிறு உப்புசம் ஆவது தடுக்கப்படுகிறது

ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது

இன்சுலின் எதிர்ப்பு அல்லது டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் 10 நிமிடம் வாக்கிங் செய்வதால் ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதோடு, ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகரிப்பதை தடுக்கிறது

ஊட்டச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது

நடைப்பயிற்சி செய்வதால் வயிறு, குடல் பகுதிகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது

உடல் எடையை நிர்வகிக்கிறது

உணவுக்கு பின் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை நிர்வகிக்கலாம்

மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது

சாப்பிட்ட பின்னர் உடல் ரீதியான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால் என்டோர்பின் வெளியாகிறது. இதனால் மனஅழுத்தம் குறைந்து மனநிலை மாற்றம் ஏற்படுகிறது. ரிலாக்ஸ் உணர்வையும் தருகிறது

நெஞ்சு எரிச்சலை குறைக்கிறது

இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் பாதிப்பின் காரணமாக உணவு சாப்பிட்டபின் நெஞ்சு எரிச்சல் அடிக்கடி ஏற்படலாம். இந்த உணர்வை தடுக்க சாப்பிட்ட பின் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்

ஆற்றல் அளவை அதிகரிக்கிறது

உணவுக்கு பின்னர் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி இயல்பாக உடல் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்கிறது. செல்களுக்கு ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளை அதிகரித்து சோர்வு, சோப்பேறி தனத்தை போக்க உதவுகிறது

அதிக உப்பு சாப்பிட்டால் ஆபத்துதா.. ஆனா உப்பை தவிர்ப்பதால் என்ன ஆபத்து பாருங்க!

Pixabay