எள்ளு விதைகளில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Aug 07, 2024

Hindustan Times
Tamil

அதிக அளவில் புரதம் நிறைந்த உணவாக எள்ளு விதைகள் இருக்கின்றன. ஒரு அவுன்ஸ் எள்ளு விதையில் 4.7 கிராம் அளவில் புரதம் உள்ளது

எள்ளு எண்ணெய்யை தான் நல்லெண்ணெய் என்று பயன்படுத்தி வருகிறோம். இதில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் ரத்த அழுதத்ததை குறைக்கிறது

டயபிடிஸ் பாதிப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய் ப்ளாஸ்மா குளுகோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது

எள்ளு விதைகளில் இடம்பிடித்திருக்கும் சைட்டோஸ்டிரால்கள் கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. கருப்பு எள்ளில் இந்த சேர்மானம் சற்று அதிகமாகவே உள்ளது

எள்ளு விதைகளில் இருக்கும் நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கு உதவுகிறது 

எள்ளு விதைகளில் இடம்பிடித்திருக்கும் துத்தநாகம் கொல்ஜன் உற்பத்தியை அதிகரித்து சரும நெகிழ்வுதன்மையை மேம்படுத்துகிறது. திசுக்களை பழுது பார்க்கிறது. எள்ளு எண்ணெய் சரும புற்றுநோய் பாதிப்பை குறைக்கிறது

எள்ளு எண்ணெய் இதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருந்தமனி தடிப்பு புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது

புற்று நோய்க்கு எதிரான சேர்மானங்களான சைடிக் அமிலம், மெக்னீசியம், சைட்டோஸ்டிரால்கள் அதிகமாக எள்ளில் இடம்பிடித்துள்ளன

எள்ளில் இருக்கும் மெக்னீசியம், கால்சியம், தையாமின், ட்ரைடோபான் கவலையை போக்கி மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், செரோடின் உற்பத்தியை அதிகரித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற வைக்கிறது

இரும்பு சத்துக்கான சிறந்த ஆதாரமாக கருப்பு எள்ளு இருக்கிறது. ரத்தசோகை, சோர்வாக இருப்பவர்களுக்கு நன்மை தரும் உணவாக உள்ளது

ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்!