பச்சை கொண்டக்கடலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 21, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்துகளின் பவர்ஹவுஸ் ஆக இருக்கும் பச்சை கொண்டக்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது

நார்ச்சத்து அதிகம்

டயட்ரி நார்ச்சத்துகளுக்கான சிறந்த ஆதாரமாக பச்சை கொண்டக்கடலை உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. குடல் நுண்ணுயிர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது

புரதம் அதிகம்

தாவரம் சார்ந்த புரதமாக இருந்து வரும் பச்சை கொண்டக்கடலை சைவம் சாப்பிடுபவர்கள், வீகன்களுக்கான சிறந்த உணவாக உள்ளது. இது தசைகளை, நோய் எதிர்ப்பு அமைப்பை, ஒட்டுமொத்த செல்களின் ஆரோக்கியத்தை பழுதுபார்ப்பதற்கு அத்தியாவசியமானதாக உள்ளது

எலும்பு ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கிறது

கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவற்றின் சிறந்த தாதுக்களின் ஆதாராமாக இருப்பதால் எலும்புகள் அடர்த்தியை தக்க வைக்க உதவுகிறது

ஆண்டிஆக்ஸிடன்ட் பண்புகள்

இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால் ப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து நாள்ப்பட்ட நோய் ஆபத்தை குறைக்கிறது

ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது

கார்ப்போஹைட்ரேட்கள், புரதம், அடிப்படை வைட்டமின்கள் பச்சை கொண்டக்கடலையில் அதிகமாக உள்ளன. இவை ஆற்றல் அளவை மேம்படுத்து சோர்வு ஏற்படுவதை தடுக்கிறது

எடையை நிர்வகிக்கிறது

நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் உடல் எடையை நிர்வகிக்கலாம்

சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா?  இதோ சில டிப்ஸ்கள்!