பருவ மழை காலத்தில் வளர்ந்து பூத்து குலுங்ககூடிய பூ வகைகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 31, 2024

Hindustan Times
Tamil

சில செடிகள், மலர் வகைகள் வளர்வதற்கும், பூத்து குலுங்குவதற்கு பருவ மழை காலத்தில் நிலவும் வானிலை, சிறந்த காலமாக இருக்கிறது

சாமந்தி பூ

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலந்த கலந்த நிறத்தில் இருக்கும் சமாந்தி பூ பருவமழை காலத்தில் நன்கு வளரக்கூடிய பூவாக உள்ளது. இதன் வண்ணம் ஒருவிதமான துடிப்பை ஏற்படுத்தும்

செம்பருத்தி

செம்பருத்தி பூக்கள் பிங்க், வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் வளரக்கூடிய பூ வகையாக உள்ளது. வீட்டு தோட்டத்தில் பருவ மழைக்காலத்தில் நன்கு வளரும் செம்பருத்தி உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை துடிப்புடன் வைக்க உதவுகிறது

காஸ்மோஸ்

வசீகரிக்கும் பூ வகையாக இருந்து வரும் காஸ்மோஸ் மழை காலத்தில் அழகாக பூத்துக்குலுங்கும். இவை பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான பூக்களாக உள்ளது

மல்லிகை

வெள்ளை நிறத்திலான நறுமனத்துடன், பெண்களை மிகவும் கவர்ந்த பூவாக இருந்து வரும் மல்லிகை மழை காலத்தில் கொத்து கொத்துவாக வளரும்

சூரியகாந்தி பூ

வீட்டு தோட்டத்தில் வளர்க்ககூடிய பூ வகைகளில் ஒன்றாக இருக்கும் சூரியகாந்தி பூ பெரிய மஞ்சள் இதழ்களை கொண்டிருக்கும் பூவாக பருவ மழை காலத்தில் நன்கு வளரக்கூடியதாக உள்ளது

மே 19ம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..