அளவுக்கு அதிகமாக முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தீமைகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 13, 2024

Hindustan Times
Tamil

சிலுவை காய்கறி வகைகளை சேர்ந்த முட்டைகோஸில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் நார்ச்சத்து, போலேட், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி, கே போன்றவை நிறைந்துள்ளன

சுவை மற்றும் ஆரோக்கியம் மிக்கதாக இருக்கும் முட்டைகோஸ் அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகளும் ஏற்படுகின்றன

வாய்வு தொல்லை, வயிற்றுபோக்க போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம் 

இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுபோக்கு அல்லது குடலில் அடைப்பு போன்ற பிரச்னை ஏற்படலாம்

தொடர்ச்சியாக மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு ரத்தம் மெலிதல் பிரச்னை ஏற்படலாம்

முட்டைகோஸில் இருக்கும் ஜீரணிக்க முடியாத சர்க்கரை, காம்பிளக்ஸ் கார்ப்போஹைட்ரேட் முழுவதுமாக செரிமாணம் அடையாமல் குடலில் சென்று வெளியேறும். இதன் விளைவாக வாயு பிர்சனை ஏற்படலாம்

அதிக அளிவில் முட்டை கோஸ் சாப்பிட்டால் தைராய்டு செயல்பாட்டில் தாக்கம் ஏற்பட்டு, தைராய்டு தொடர்பான பிரச்னைகள் வரலாம்

முட்டை கோஸ் ரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவு குறைக்கும் என்பதால் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்

Parenting Tips : உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள்! அவர்களை அமைதிப்படுத்தும் வழிகள்!